Hello world!

October 6, 2010 1 comment

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Categories: Uncategorized

தங்கள் அமீருக்கு (தலைவருக்கு) கட்டுப்படுகிறார்களா?

October 6, 2010 Leave a comment
Categories: Islamic News

யாரும் குர்ஆனைத் தொடலாம், படிக்கலாம் தடையில்லை!

October 6, 2010 Leave a comment


இறுதித் தூதராக முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட குர்ஆனும் அகில உலகத்திற்கும் பொதுவானது என்பது தெளிவாகிவிட்டது. அதனை குர்ஆன் பல இடங்களில் அறிவிக்கிறது:

‘இந்த குர்ஆன் முழு மனித சமுதாயத்திற்கும் வழிகாட்டி. சத்தியத்தையும், அசத்தியத்தையும் அது பிரித்தறிவிக்கிறது.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 185வது வசனம்).
இதே கருத்துடைய வசனங்கள் அருள்மறை குர்ஆனின் கீழ் குறிப்பிட்ட அத்தியாங்களில் உள்ளன: 3:138, 38:87, 68:52, 81:27.

2:185
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللّهُ بِكُمُ الْيُسْرَ وَلاَ يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُواْ الْعِدَّةَ وَلِتُكَبِّرُواْ اللّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

3:138
هَـذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَمَوْعِظَةٌ لِّلْمُتَّقِينَ
இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.

 

38:87
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
“இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
68:52
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
ஆனால் அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லுபதேசயேன்றி வேறில்லை.
81:27
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ
இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

இந்த குர்ஆனுடைய போதனை நாத்திகர்களுக்கும், யூதர்களுக்கும், கிறஸ்தவர்களுக்கும், சிலையை வணங்குபவர்களுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. உலகிலுள்ள 600கோடி பேர்களில் 200 கோடி பேர் முஸ்லிம்கள். மீதமுள்ள 400 கோடியும் முஸ்லிம் அல்லாதவர்கள்தான். அவர்களும் இறை நேசம் பெற வேண்டுமானால் குர்ஆனை படித்தாக வேண்டும். பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனை கொண்டு போகலாம் என்பது பொருந்தாத வாதம்.


பிரச்சாரத்தின் மூலம் குர்ஆனடைய வசனங்களில் சிலவற்றை பரவலாக கொண்டு போக முடியுமேத் தவிர, மொத்த குர்ஆனையும் கொண்டு போக முடியாது. குர்ஆனைப் படிக்கத் துவங்கினால்தான் மொத்த குர்ஆனுடனும் ஐக்கியமாகி புரிந்து கொள்ள முடியும். அதற்கு தங்கு தடையை குர்ஆன் ஏற்படுத்தவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களே எந்த சந்தர்ப்பத்திலும் குர்ஆனைத் தொடலாம்.

பிடிக்கலாம். சிந்திக்கலாம் என்றாகிவிடும் போது – இறை நம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கு இதில் எந்தத் தடையும் இருக்க முடியாது.

ஆக துய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் எதுவும் நிரூபிக்கப்பட்டதாக இல்லை. இவற்றை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க முடியாது.

இனி அல்-குர்ஆனின் 56வது அத்தியாயம் ஸூரத்துல் வாகியாவின் 79வது வசனத்திற்கு வருவோம்

56:79
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
இந்த வசனத்தை எடுத்துக் காட்டியும், ‘தூய்மையானவர்களைத் தவிர வேறு யாரும் குர்ஆனைத் தொடக்கூடாது’ என்று சிலர் வாதிடுகின்றனர். எனவே அதுபற்றியும் முழுமையாக அறிவது அவசியம்.

‘நிச்சயமாக இது மிகவும் கண்ணியமும், சங்கையும் மிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இது இருக்கின்றது. தூய்மையானவர்களைத் தவிர இதனைத் தொடமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகிஆ வின் 77, 78, 79ஆம் வசனங்கள்
56:77
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:78
فِي كِتَابٍ مَّكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:79
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

இந்த வசனத்தில் இடம் பெறும் ‘தூய்மையானவர்கள்’ யார்? என்பதையும், அதனைத்தொடமாட்டார்கள் என்பதில் வரும் ‘அதனை’ என்பது எது என்பதையும் விளங்கிக் கொண்டால் தெளிவு கிடைத்துவிடும்.

‘அதனை தொடமாட்டார்கள்’ என்கிறான் இறைவன். இது குர்ஆனை குறிப்பதாக இருந்தால் ‘தொடக் கூடாது’ என்ற கட்டளை மனிதர்களை முன்னிலைப் படுத்தி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். கட்டளையாக வராமல் ‘தொடமாட்டார்கள்’ என்று படர்க்கையாக ‘செயல்வினைச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதாவது இனி நடக்க வேண்டிய ஒரு காரியத்தைப் பற்றி இறைவன் பேசாமல், ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயம் பற்றி பேசுகிறான்.

தொடமாட்டார்கள் என்பது மனிதர்களை குறிப்பதாக இருந்தால் அந்த வசனம் அர்த்தமில்லாமல் போகிறது. எப்படி?.

வுழு செய்துவிட்டு தொடுவதுதான் தூய்மை என்றால் – வுழுவும், தொழுகையும் நபி (ஸல்) அவர்களின் 52வது வயதில்தான் கடமையாகிறது. அதாவது திருக்குர்ஆனின் வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் 40வயதாக இருக்கும்போது வஹியாக வரத்துவங்கியது. அவ்வாறு வஹியாக வரத்துவங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வுழுவும், தொழுகையும் கடமையாகிறது. அப்படியெனில் குர்ஆன் வஹியாக வரத் துவங்கி 12 ஆண்டுகள் வரை
நபித் தோழர்கள் அசுத்தமான நிலையிலேயே குர்ஆனை பதிவு செய்துள்ளார்கள் என்ற பொருள் வருகிறது. மேற்கண்டவாறு விளங்கினால் அந்த வசனம் சொல்லும் கருத்துக்கு அர்த்தமில்லாமல் போகிறது.

‘இனி தொடமாட்டார்கள்’ என்ற கருத்தில் அந்த வசனம் வந்திருக்கிறது என்று எவராவது சொன்னால், இந்த வசனம் இறங்கிய பிறகாவது நபித்தோழர்கள் வுழுசெய்துவிட்டு வந்துதான் வஹியை – குர்ஆனை பதிவு செய்தார்கள். நபி (ஸல்) இப்படித்தான் இந்த வசனத்தை விளக்கினார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும். எந்த ஹதீஸ் நூலிலும் இதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

எனவே ‘தொடமாட்டார்கள்’ என்பது மனிதர்களை குறிப்பதற்கு வாய்ப்பேயில்லை. மனிதர்களை குறிப்பதாக இருந்தால் ‘தொடக்கூடாது’ என்ற கட்டளை வந்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘அதனை’ என்பது என்ன?.

‘அதனை’ என்பதற்கு குர்ஆன் என்று பொருள் கொண்டால் – குர்ஆன் தொடக்கூடிய வடிவத்தில் இறங்கியிருக்க வேண்டும். குர்ஆன் தொட்டு உணரக் கூடிய நூல் வடிவத்தில் இறங்கவில்லை. மாறாக ஓதி அறியக்கூடிய ‘வஹி’ யாகத்தான் இறக்கியருளப்பட்டது. அதற்கு ஆதாரமாக அருள்மறை குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் உள்ளன.

‘இறைவனின் கட்டளைப்படி ஜிப்ரீல் இதனை உம்முடைய உள்ளத்தில் இறக்கி வைத்தார்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 2 – ஸூரத்துல் பகராவின் 97வது வசனம், அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷூஃராவின் 192வது வசனம்).

2:97
قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَى قَلْبِكَ بِإِذْنِ اللّهِ مُصَدِّقاً لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَى لِلْمُؤْمِنِينَ
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது
26:192
وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ
ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார்.
‘(நபியே!) நாம் உம்மை ஓதி காட்டச் செய்வோம் பிறகு நீர் மறக்கமாட்டீர்’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 87 ஸூரத்துல் அஃலாவின் 6வது வசனம்)

87:6
سَنُقْرِؤُكَ فَلَا تَنسَى
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்

 

மேற்படி வசனங்கள் குர்ஆன் நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தில் வஹியாக அறவிக்கப்பட்டதேத் தவிர ஏடாக வரவில்லை என்பதை அறிவிக்கிறது.
‘எழுதப்பட்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கியிருந்தால் அதை தமது கரங்களால் தொட்டுப் பார்த்து இது வெறும் சூனியமேத் தவிர வேறில்லை என்று கூறியிருப்பார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்-ஆம் 7வது வசனம்)

6:7
وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُواْ إِنْ هَـذَا إِلاَّ سِحْرٌ مُّبِينٌ
காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தம் கைகளால் தொட்டுப் பார்த்தபோதிலும், “இது பகிரங்கமான சூனியத்தைத்தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாக சொல்வார்கள்

இந்த வசனத்தின் மூலம் குர்ஆன் ஒரு எழுதப்பட்ட ஏடாக வரவில்லை என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஓசையும் – உச்சரிப்பாகவும் மட்டும்தான் குர்ஆன் வஹியாக அருளப்பட்டது. ஓசையையும், உச்சரிப்பையும் – யாராலும் தொட முடியாது. அப்படியானால் ‘அதனை’ என்று தொடக் கூடிய வடிவத்தில் இருக்கும் ஒன்றைத்தான் இறைவன் கூறியிருக்க முடியும். குர்ஆன் தொடக் கூடிய வடிவத்தில் இறைவனிடமிருந்து இறங்கவில்லை என்பதால் ‘அதனை’ என்பது குர்ஆனை குறிக்காது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
தூய்மையானவர்கள் என்றால் யார்?.

இஸ்லாமிய மொழி வழக்கில் அதாவது குர்ஆன் – ஸூன்னா வழியில் தூய்மை என்பது பல அர்த்தங்களில் வந்துள்ளது.
உள்ளத்தூய்மை, வுழு, மாதவிடாய் மற்றும் பிரசவத் தீட்டிலிருந்து தூய்மை அடைதல், தீய காரியங்களிலிருந்து விலகி நிற்றல் என்று ஏராளமாக சொல்லலாம். இதில் எதுவும் நாம் மேற்குறிப்பிட்ட வசனத்திற்கு பொருந்தாது. ஏனெனில் ‘அதனை’ என்று குர்ஆன் அல்லாத ஒன்றை இறைவன் சொல்வதால் இந்த அர்த்தங்கள் அங்கு பொருந்தாது.
இப்போது இந்த வசனத்தின் வரலாற்றுப் பின்னனியை அணுகினால் முடிவான விடை கிடைத்துவிடும்.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவ பிரச்சாரம் செய்தபோது எதிரிகளால் பல ‘சொல்’ தாக்குதலுக்கு உள்ளானார்கள். அதில் ஒன்று ‘ஷைத்தான்கள் இவருக்கு கற்றுக் கொடுப்பதைதான், இவர் மக்களுக்கு ஓதிக் காட்டுகிறார்’ என்பதாகும்.
மேற்படி ‘சொல்’ தாக்குதலை மறுத்து இரண்டு வசனங்கள் இறங்கின.
‘இதை ஷைத்தான்கள் இறக்கிவைக்கவில்லை. அது அவர்களுக்கு தகுதியானதுமல்ல. அதற்கு அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 26 ஸூரத்துஷ் ஷுஃராவின் 210 மற்றும் 211ஆம் வசனங்கள்)
26:210
وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيَاطِينُ
இன்னும், ஷைத்தான்கள் இ(வ் வேதத்)தைக் கொண்டு இறங்கவில்லை.

26:211
وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
மேலும், அது அவர்களுக்கு தகுதியுமல்ல (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்

‘இது கண்ணியமிக்க குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட (லவ்ஹூல்- மஹ்ஃபூல்) என்னும் ஏட்டில் அது இருக்கிறது. தூய்மையானவர்(மலக்கு)களைத் தவிர வேறு யாரும் அதனை (லவ்ஹூல்- மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டை) தொடமாட்டார்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 56 ஸூரத்துல் வஆகியா 77 முதல் 79வது வசனம் வரை)

56:77
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.

56:78
فِي كِتَابٍ مَّكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:79
لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.


மக்காவில் உள்ள இறை நிராகரிப்பாளர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பாக நீங்கள் கூறுவது போல் ஷைத்தான்கள் இதனை இறக்கவில்லை. அதை இறக்கக் கூடிய சக்தி அவர்களுக்குக் கிடையாது. பாதுகாக்கப்பட்ட மூல ஏட்டிடம் ஷைத்தான்கள் நெருங்க முடியாது. பாவம் என்றால் என்னவென்றே அறியாத ‘தூய்மையான மலக்குகளைத் தவிர வேறு எவரும் ‘அதனைத் தொடமாட்டார்கள்’ என்று இறைவன் தெளிவாக அறிவித்து   விட்டான். இப்னு அப்பாஸ் (ரலி) ஸயீத் பின் ஜூபைர் (ரலி), அனஸ் (ரலி) போன்ற நபித்தோழர்கள் அனைவரும் மேற்கண்ட விளக்கத்தையே கொடுகத்துள்ளார்கள். (இப்னு கஸீர் விளக்கவுரை).
அருள்மறை குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்பதாலும்,
நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக வரும் செய்திகள் அனைத்தும் பலகீனமாக இருப்பதாலும்,
‘தூய்மையானவர்களைத் தவிர’ என்பது மனிதர்களை குறிக்கவில்லை என்பதாலும்,
அருள்மறை குர்ஆனை எந்த சந்தர்ப்பத்திலும், எந்நிலையிலும் தொடலாம், ஓதலாம். அதைத் தடுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

ஓசையும் உச்சரிப்புமாக இறங்கிய குர்ஆன் பிற்கால மக்களுக்காக எழுத்து வடிவமாக பதிவு செய்து, பாதுகாக்கப்பட்டு வருகின்றது. எழுத்து வடிவத்தைப் படிக்கும்போது ஓசையும், உச்சரிப்பும் அதேவிதத்தில் வருவதால் எல்லா புத்தகங்களைப் போன்றதுதான் என்று சமமாக பார்க்க முடியாது. குர்ஆனில் இருக்கும் பொருளின் காரணத்தால் – குர்ஆனுக்கு கண்ணியம் அவசியமாகிறது என்பதை விளங்கலாம்.

குர்ஆனை மக்கள் தொடும் விஷயத்தில், ஓதும் விஷயத்தில் வுழு வேண்டும், தூய்மை வேண்டும் என்று நாமாகப் பல தடைகளைப் விதித்திருப்பதால்தான் மக்கள் குர்ஆனிலிருந்து விலகி நிற்கின்றனர். குர்ஆனிலிருந்து மக்களை விடுபடச் செய்யும் இந்த போக்கு அநீதி என்றே முடிவு செய்ய முடிகிறது.

இரும்புச் சத்து குறைபாட்டால்

October 6, 2010 Leave a comment
jQuery(document).ready(function() { jQuery(“a#single_image4208”).fancybox(); });
இந்திய மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்கள், வயது வித்தியாசம் இன்றி, இரும்புச் சத்து குறைபாட்டினால் அனீமியா என்ற ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில், ஹீமோகுளோபின் (எச்.பி.,) அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 10 கிராம் தான் உள்ளது. இதை 10 ஜி/டி.எல்., என்ற அளவில் குறிக்கிறோம். உடலில் ஹீமோகுளோபின் அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 11 முதல் 15 கிராம் வரை இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இந்த குறைபாடு, வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இல்லை.
மற்ற நோய்கள் ஏற்படும் போது கடும் காய்ச்சலோ, கட்டியோ உருவாகும். ஆனால், ரத்தசோகை நோய் உடனடியாக ஏற்படாது. மெதுவாக ஏற்பட்டு, மெதுவாகவே அதிகரிக்கும். இந்த நேரத்தில் வரும் என்றும் கூற முடியாது. எனவே, இந்நோயைக் கண்டறிவது கடினம். கண்டறிவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட நபர் கடுமையான நோயாளியாகி விடுவார். இதற்கான அறிகுறிகளாக, சோர்வு, அசதி, தலைவலி, தலை லேசாகிப் போதல், மூச்சிறைத்தல், கால், கை சில்லிட்டுப் போதல், நகங்கள் வலுவிழத்தல், நா வறட்சி ஆகியவை ஏற்படும்.
கால்கள் ஆடிக் கொண்டே இருக்கும்; இதனால் இரவுத் தூக்கத்தில் திடீர் விழிப்பு நிலை ஏற்படும். பசி எடுக்காது. சத்தான உணவு சாப்பிடத் தோன்றாது. ஐஸ் கட்டி, சமைக்கப்படாத அரிசி, புழுதி, சாக்பீஸ், கரிக் கட்டை, பெயின்ட், விபூதி, குங்குமம் ஆகியவற்றை சாப்பிடத் தோன்றும். இரும்புச் சத்து குறைபாடு கொண்ட ரத்தசோகை ஆபத்தானது. ஏனெனில், ஹீமோகுளோபின் உருவாக இரும்புச் சத்து மிக அவசியம். ரத்தத்தின் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் காணப்படும். இதன் முக்கிய பணியே, உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்து செல்வது தான். ஹீமோகுளோபின் குறைந்தால், சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கும். ஆண், பெண் இருவருக்குமே, உடலில் இரும்புச் சத்து குறைந்தபடியே இருக்கும்.
இறந்த செல்கள் உதிரும் போது, கழிவுகள் வெளியேறும் போது, தினமும் ஒரு மி.லி., கிராம் அளவு, இரும்புச் சத்தும் வெளியேறி விடும். மகப்பேறு தகுதி கொண்ட அனைத்து பெண்களுமே, மாதவிடாய் காலங்களில் தினமும், கூடுதலாக ஒரு மி.லி., கிராம் அளவும், மகப்பேறு காலத்தில் 500 மி.லி., கிராம் அளவும் இரும்புச் சத்தை இழக்கின்றனர். எனவே, ஆண்களை விட பெண்கள் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் போது உடல் சோர்வு, வீடு மற்றும் அலுவலகப் பணிகளை சுறுசுறுப்பாய் செய்ய முடியாமல் போதல் ஆகியவை ஏற்படும். மகப்பேறு தகுதி உடைய பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், ரத்தசோகை உள்ள குழந்தை பிறத்தல் ஆகியவை ஏற்படலாம்.
கடும் ரத்தசோகை ஏற்படின், தாய் உயிருக்கே உலை வைத்து விடும். குழந்தைகள், தாயிடமிருந்தே இரும்புச் சத்தை வாங்கிக் கொள்கின்றன. பிறந்து ஆறு மாதம் வரை, தாயிடமிருந்து பெறப்பட்ட இரும்புச் சத்தே, குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும். அதன் பிறகு, இரும்புச் சத்து டானிக் கொடுக்கத் துவங்க வேண்டும். குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குழந்தையின் அறிவுத் திறன் 5 முதல் 10 பாயின்ட் வரை குறையும். மொழி கற்றுக் கொள்வதில் சிரமம் உண்டாகும். உடல் வளர்ச்சியும் குன்றும். சோர்வு, தாமத செயல்பாடு, உணவு சாப்பிடத் தோன்றாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தொடர் தொற்று ஏற்படுதல் ஆகியவை உண்டாகும்.
விடலைப் பருவத்தை அடைந்த பெண்கள், அதிகளவில் ரத்தசோகையால் பீடிக்கப்படுகின்றனர். மாதவிடாய் ஏற்படத் துவங்கும் காலமான இந்த நேரத்தில், திடீர் சோர்வு ஏற்படுவதால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். கவனம், நினைவுத் திறன் குறையும். நல்ல முறையில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதனால், பல பெண்களுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காத நிலை ஏற்படும். இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப் புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில் சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியாவில் தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது.
இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேர்கிறது. வயிற்றில் புழு தோன்றுவதைத் தவிர்க்க அனுபவ ரீதியான மருத்துவம் தான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. அல்பெண்டிசால் மருந்து சாப்பிடுவது அல்லது மூன்று நாட்களுக்கு, இரண்டு வேளை மெபெண்டசால் மருந்து சாப்பிடுவது என்ற நிலை உள்ளது. சரியான முறையில், சரியான அளவு மருந்து சாப்பிடவில்லை எனில், வயிற்றில் எல்லா புழுக்களும் அழியாமல், சதை வழியே மற்ற பாகங்களுக்குப் பரவும் நிலை ஏற்படும். கீரைப் புழு ஒருவரிடம் இருந்தால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வந்து விடும். இதனால், இந்தப் புழுவை அழிக்க, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்குப் பின், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளராமல் இருக்க…
* சமையல் செய்வதற்கு முன், கையை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், ஒவ்வொரு முறை சிறுநீர், மலம் சென்ற பின்னும், கையை மிகச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* கையில் நகங்கள் வளர்ந்தால், இடுக்குகள் இல்லாமல், சீராக கத்தரிக்கப்பட வேண்டும்.
* பச்சைப் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நன்கு சமைக்கப்படாத காய்கறிகளை சாப்பிடக் கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்கு முன், நன்றாகக் கழுவ வேண்டும்.
* படுக்கை விரிப்புகளை, வாரத்திற்கு இரு முறை மாற்ற வேண்டும். துவைத்த விரிப்புகளை, வெயில் படும்படி உலர்த்த வேண்டும். ரத்தசோகை ஏற்படாமல் இருக்க, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நாள் ஒன்றுக்கு, 10 முதல் 15 மி.லி., கிராம் வரை இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி, இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
சைவம் சாப்பிடுபவர்கள், சோயா, கோதுமை, ஓட்ஸ், உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம். காய்கறிகளில் உள்ள சில ரசாயனங்கள், அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தடை ஏற்படுத்தி விடுகின்றன.
எனவே, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட, காய்கறியில் கிடைக்கும் சத்து குறைவானதே. எனவே, காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். குழந்தைகளும், பெண்களும் இரும்பு ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உணவுடன் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்.
தினமும் ஒரு மாத்திரை என சாப்பிடத் துவங்கலாம். எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடன் சாப்பிடலாம். அமிலம் கலந்த சாறு, இரும்புச் சத்து உடலில் நன்கு உறிஞ்சிக் கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டால், கூடவே வாழைப்பழமோ, கொய்யா பழமோ சாப்பிடலாம்.
இரும்புச் சத்து மாத்திரையுடன், கால்சியமோ, துத்தநாகச் சத்து நிறைந்த மாத்திரையோ சாப்பிடக் கூடாது. அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் பாலிக் ஆசிட் அடங்கிய சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இப்படி கொடுப்பதில்லை. பெற்றோராகிய நாம் தான், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
Categories: Helth

பொது இடங்களில்

October 6, 2010 Leave a comment

jQuery(document).ready(function() { jQuery(“a#single_image8281”).fancybox(); });
பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?
மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.
ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.
முதல்வகை தலையில் வசிப்பவை.
இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.
மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.
இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.
மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு  ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.
இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.
உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.
மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.
காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேன் சீப்பு’ பயன்படுத்துவது தான்.
Categories: Helth

அயோத்தியும் ராஜராஜனும்

October 6, 2010 Leave a comment

 

கருணாநிதி கவலை
கருணாநிதி கவலை

இந்துக்களின் கடவுளாகக் கருதப்படும் ராமர், 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடியும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழந்து மறைந்த மன்னன் ராஜராஜ சோழனின் நினைவிடத்தை அறிய முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாக இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அயோத்தியில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கடந்த 60 ஆண்டுகளாக நீடித்துவந்த சட்டப் பிரச்சினையில், கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில், சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்றும், அதில் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும், இரு பகுதிகளை இந்து அமைப்பு்ககளுக்கும் வழங்க உத்தரவிட்டது. அவ்வாறு இந்து அமைப்பு்க்களு்ககு வழங்க உத்தரவிட்ட ஒரு பகுதியில்தான் ராமர் பிறந்ததாகவும், தீர்ப்பில் ஒரு நீதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தத் தீர்ப்பைத் தொடர்புபடுத்தி, ராஜராஜ சோழன் வரலாறு குறித்து கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அயோத்தி வழக்கில் நீதிபதி டி.வி. ஷர்மா தனது தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் என்றும், அவர் கடவுள் என்றும் அவர் தெய்வாம்சம் பொருந்தியவராக வழிபட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அந்த இடத்தில் பாபரால் கட்டடம் கட்டப்பட்டது குறித்தும், சர்ச்சைக்குரிய அந்த இடத்தை ராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்ததாகவும், நினைவு தெரிந்த நாளில் இருந்தே அதைப் புனிதத்தலமாகக் கருதி ஆன்மிகப் பயணம் சென்று வருவதாகவும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
”17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ராமர் பிறந்த இடத்தை உறுதிப்படுத்த முடிகிறது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தென்னகத்தை ஆண்ட மன்னன் ராஜராஜன் மறைந்த விதத்தையோ, அவரது கல்லறையையோ, அவரது நினைவுத் தூண் அமைந்த இடத்தையோ நம்மால் இன்னும் அறிய முடியவில்லையே என மனம் நொந்து வருந்த வேண்டியுள்ளது” என்று கருணாநிதி கவலை தெரிவித்துள்ளார்.
ராஜராஜனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை சமீபத்தில் தமிழக அரசு கொண்டாடியது. அப்போது அந்த நிகழ்வில், பேசிய கருணாநிதி, ராஜராஜன் காலத்தில்தான் நில அளவை முறை, நீட்டல் அளவை முறை, நிறு்ததல் அளவை முறை, ஊராட்சிக்கான குடவோலை முறைகள் அறிமுகம் செய்யப்பட்டதாகவும், ராஜராஜன் எழுப்பியிருக்கும் தஞ்சைப் பெரிய கோயிலும், பொறித்து வைத்திருக்கும் கல்வெட்டுக்களும் அவற்றுக்கு சான்றாக உள்ளதாகவும் குறிப்பிட்டிருருந்தார்.
திராவிட இனத்தின் வரலாறு, நிரல்படுத்தி முறையாக எழுதப்படவில்லை என்றாலும் கூட, லெமூரியா கண்டத்தைப் பற்றிய ஆராய்ச்சி, சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றிய ஆராய்ச்சி, தமிழ்மொழியைப் பற்றிய மூல ஆராய்ச்சி ஆகிய ஆராய்ச்சிகளின் மூலமாக, வெளிநாடுகளைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்கள், மொழியியல் வல்லுநர்கள், திராவிட நாகரிகம் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கருத்துத் தெரிவித்திருப்பதாக கருணாநிதி தனது அறி்க்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அடிப்படையில், திராவிட இனத்தின் வரலாறு பற்றிய ஆதாரங்களை, பிற வரலாறுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, திராவிட இனம் அறிவியல் ரீதியாக வாழ்ந்துள்ள உண்மை வரலாற்றை உலகம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். ஆனால், திராவிட இனத்தைப் புறந்தள்ள முயற்சித்த ஆரிய நாகரிகம், அடிப்படை ஆதாரம் இல்லாமலே வெறும் மூட நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதில் மட்டும் முனைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தனது அறி்க்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Categories: News

கூகுள் இணையதளத்தை பயன்படுத்துவதால் மூளையில் பாதிப்பு?

October 5, 2010 Leave a comment

jQuery(document).ready(function() { jQuery(“a#single_image7758”).fancybox(); });
கூகுள் தேடல் இணையதளத்தில் உடனுக்குடன் வெளிவரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என, பிரிட்டனை சேர்ந்த ஆய்வு எழுத்தாளர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த பிரபல ஆய்வு எழுத்தாளர் நிக்கோலஸ். இவர் இணையதளங்கள் பார்ப்பதால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து “தி ஷாலோஸ்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதில் கூகுள் இணையதளத்தில் உடனுக்குடன் வரும் தகவல்களை கூர்ந்து கவனிப்பதால் மூளையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:
இணையதளங்களை பார்க்கும் போது நமது மூளை இயல்பை விட சற்று கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதனால் மூளையில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கூகுள் இணையதளத்தில் தகவல் மற்றும் இணையதளங்களை தேடும் போது, அது நமது மூளையின் செயல்பாட்டை விஞ்சிய வேகத்தில் தகவல்களை தருவதால், பாதிப்புகளை உண்டாக்குகிறது.
வாடிக்கையாளர் மற்றும் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு எளிய முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக சாப்ட்வேர் நிபுணர்கள் பல புதிய யுக்திகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துகின்றனர்.
இதன் மூலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளங்களில் நாம் வேகமாக பணிகளை செய்ய முடிகிறது. ஆனால் அந்த அளவிற்கு மூளையும் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்படுவதால் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.
என்னை கவர்ந்த தேடுதல் இணையதளம் கூகுள். ஆனால் அதில் ஒரு குறிப்பிட்ட வழிமுறைகளை கையாண்டு பயன்படுத்த வேண்டும். ஒரு எழுத்தின் அர்த்தத்தை வைத்து தேடி முடிவுகள் தெரிவிப்பதற்குள் அடுத்த முடிவுகளுக்கு செல்லும் அளவிற்கு கூகுள் இணையதளம் வேகமாக செயல்டுகிறது.
இதுவே பாதிப்புகளுக்கு காரணம். இதேபோன்று செயற்கைக்கோள் உதவியுடன் செயல்படும் ஜி.பி.எஸ்., வழிகாட்டும் தொழில்நுட்ப முறையும் மனித மூளையின் ஆற்றலை குறைக்கிறது. இவ்வாறு நிக்கோலஸ் கூறினார்.